Tuesday, July 24, 2018

சிதம்பர ரகசியம் – சில ஆச்சரியத் தகவல்கள்

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொ றியியல், புவியியல், கணிதவியல், மருத்துவ வியல் குறித்த ஆச்சரியங்க ளின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல் களும் ஒரு தெளிவான சிந் தனையை நோக்கியே பயணித்துள்ளது, சிதம்பர ம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற் புதமான ரகசியங்கள் இவைகள்தான்.”

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).
.
(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறி க்கும் தில்லை நட ராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத் தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,

இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லி யம் அன்றை க்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல், புவியியல் மற் றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக் கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உட லில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின்மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடு களை கொண்டு வேயப்பட்டுள் ளது, இது மனிதன் ஒரு நாளை க்கு சராசரியாக 21600 தடவை கள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கி ன்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத் தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இரு க்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது. இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்ப வையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்ப ரம், அதுவே சதாசிவம், அதுவே அவரி ன் நடனம்”. என்ற பொருளைக் குறிகி ன்றது.

(7) “பொன்னம்பலம்” சற்று இடது புற மாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடை ய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப் படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில் களில் இருப்பதை போன்று நேரான வழி யாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின் றது . இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக் கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங் களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கி ல் செல்லும் பல பலகைகள் (CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்ட பத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திர ங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கி ன்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண் டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்க ளால் அழைக்கபடுகின்றது.




Wednesday, July 4, 2018

அவள் வருவாளா

காதல் என்னும் போர்வைக்குள்,
கன்னியவளை கனவில் தேடுகிறான்,
காத்திருப்பு எல்லாம் கரைவதற்குள்,
கவிதைக்கு உயிர்சேர்க்க அவள் வருவாளா???

அவள் விழுந்த விழிகளுக்குள்,
அணுவளவும் உறக்கமின்றி தவிக்கிறான்,
அந்நியமாய் விரும்பியவள் கடப்பதற்குள்,
அவனுள்ளே அடங்கிப்போக அவள் வருவாளா???

வலிகள் சொல்லும் கண்ணீருக்குள்,
வழியும்துளியில் அவளையே காண்கிறான்,
வழிகளை தேடியே தொலைவதற்குள்,
வழிதுணையாய் மறக்காமல் அவள் வருவாளா???

மாய்ந்துப் போன ஆசைகளுக்குள்,
மாயங்கள் நிகழ வேண்டுகிறான்,
மாலையோடு கல்லறை சேர்வதற்குள்,
மாங்கல்யம் ஏந்திட அவள் வருவாளா???

உயிர்துளி அத்தனையும் உரைவதற்குள்,
உறவானவளின் தடயத்தை யாசிக்குறான்,
உதிரமும் வற்றி போவதற்குள்,
உயிரளித்து உறவாடிட அவள் வருவாளா???

Thursday, June 28, 2018

தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.
திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது.
ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன்.
அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.

இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை.
இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே!
அம்மொழியும் தமிழ் மொழியே!
கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன.
பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல.

நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது. தொல்காப்பியம் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம்.
தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.
தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன.
ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ் :
தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்
1. பழந்தமிழ் (Ancient Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ் Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்திய இடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின் இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Mode Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Mode Tamil
ஆ. மத்திய தற்காலத் தமிழ் – Medium Mode Tamil
இ. பின் தற்காலத் தமிழ் – Later Mode Tamil

தொல்பழங்காலத்தில் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள்.

தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது.
பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.
தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது.
அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன.
அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது.
உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது. வரலாற்றுச் சான்றுகள் வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று.
மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு.
ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.
தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள் மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.
ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே!
இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர்.
மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.

Wednesday, June 27, 2018

Blood Pressure ஒரு நோயல்ல

ஒரு நிறை மாத கர்பிணி ஒருவர் பிரசவிக்கும் போது தன் முழு திறனையும் உபயோகித்து முக்கும் போது அப்பெண்ணின் உடல் வியர்த்து , மூச்சு வாங்குதல், படபடப்பு அனைத்தும் ஏற்பட்டு பிறகு படிப்படியாக குறைந்து சிறிது நேரத்தில் சகஜ நிலையை அடையும்.

அந்த பெண் குழந்தையை வெளியேற்ற முயற்ச்சிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்த இரத்த அழுத்தம் அந்த நேரத்தில் அவசியமாகிறது.

ஓட்டப் பந்தய வீராங்கனை மைதானத்தில் ஓடுகிறார். வேகமாக ஓடும்போது மூச்சை அடக்கி ஓடுகிறார். ஓடி முடித்ததும் மூச்சிரைப்பு ஏற்படுகிறது படபடப்பு அதிகமாகிறது வியர்வை கொட்டுகிறது முகம் சிவந்து போகிறது

இரத்தக் குழாய்கள் அதிகம் உள்ள கழுத்து முகம் போன்ற பகுதிகளில் விண் விண் என்ற வலியுணர்வு ஏற்படுகிறது. களைப்புடன் உட்கார்ந்து விடுகின்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு உபாதைகள் குறைந்து உடல் சகஜ நிலையை அடைகிறது.

பிரசவிக்கக்கூடிய பெண்மணிக்கு இயற்கையாக வலிகள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. பிறகு பிரசவம் முடிந்தவுடன் இரத்த அழுத்த மாறுபாடுகள் நீங்கி உடல் மீண்டும் சகஜ நிலையை அடைகிறது.

விளையாட்டு வீராங்கனை வேகமாக ஓட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக தானே உடலை அதிகமாக இயங்க வைக்கிறார். அதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகமாகிறது.

மூச்சு வாங்குதல் படபடப்பு வியர்வை போன்ற அசௌகரியங்கள் தற்காலிகமாக ஏற்பட்டாலும் அது உடலை பாதிப்பதில்லை. மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுகிறது.

நுரையீரல் காற்று என்னும் மூலப் பொருளுடன் சம்பந்தப்பட்ட உள்ளுறுப்பு. இது ஐம்புலன்களின் ஒன்றான மூக்கின் வழியாக வெளி உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.

நுரையீரல் வாயு மண்டலத்தில் உள்ள காற்றுடன் இணக்கத்துடனும் நல்ல தொடர்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் நோய்கள் ஏற்படுவதில்லை.

எப்போது வாயு மண்டலத்தில் உள்ள காற்று நமது உடலுக்கு ஏற்புடையதாக இல்லையோ அப்போதுதான் மூக்கடைப்பு, சளி, தும்மல் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டு நுரையீரல் நோய் உருவாகிறது.

ஜலதோஷம் பிடிக்கும் போது நுரையீரல்களின் பாதிப்பை நீக்குவதற்காக இயற்கையான இரத்த ஓட்டத்திற்கும் அதிகப்படியான இரத்தம் நோய்களை விரட்ட தேவைப்படுகிறது. அதன் மூலம் நோயை எதிர்த்து போராடுகிறது.

இந்த அதிகப்படியான இரத்த ஓட்டம் இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. நோய் குறையும் வரை இந்த இரத்த அழுத்தம் தேவைப்படுகிறது. இந்த இரத்த அழுத்தம் நோயிலிருந்து மனிதனைக் காப்பாற்ற உடல் எடுத்துக் கொள்ளும் இயற்கையான முயற்சியாகும்.

இன்று புரிந்து கொள்ளுங்கள் இரத்த அழுத்தம் (blood pressure) என்பது நோயல்ல. நம் உடலில் உள்ள நோயை நீக்குவதற்காக உடல் ஏற்படுத்தும் நல்ல முயற்சியாகும்.

இரத்த அழுத்தம் அதிகமாகியும் தும்மல், சளி, இருமல் போன்ற உபாதைகளை நுரையீரல் நீக்க முடியாவிட்டால் நோய்கள் தீவிரமடைய ஆரம்பித்து விடும். ஆப்போதுதான் மூக்கடைப்பு, தீராத சளி, ஆஸ்துமா என்று உருவெடுக்கின்றன.

அப்போது இரத்த அழுத்தம் அதிகமாகி இரத்தக் கொதிப்பாக மாறுகிறது. எத்தனை நாட்கள் சளி உபத்திரங்கள் உடலை விட்டு நீங்கவில்லையோ அத்தனை நாட்களிலும் இரத்தக் கொதிப்பும் உடலில் சேர்ந்துதான் இருக்கும்.

ஜலதோஷம் போன்ற நோய்களை ஒரு உருவமாக எடுத்துக் கொண்டால் அதன் நிழல்தான் இரத்தக்கொதிப்பு , இவை இரண்டையும் பிரிக்கமுடியாது. சளியை குணப்படுத்தாமல் இரத்தக்கொதிப்பை மட்டும் நீக்க முடியாது.

சளியை குணப்படுத்தினால் இரத்தக்கொதிப்பு தானே அடங்கி விடும். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் இதை மூக்கடைப்பு என்றும் ஆஸ்த்துமா என்றும் தனித்தனியாக பட்டியலிடுவார்கள். அதற்கு தன்த்தனியாக மருந்துகள் கொடுப்பார்கள்.

நுரையீரலுக்கு சக்தியளிக்கத் தெரியாதவரை எந்தவொரு நோயையும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஆங்கில மருத்துவத்தில் நோய்கள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன.

ஆங்கில மருத்துவம்தான் இதை ஒரு நோயாகவும் அதை கண்டுபிடிக்க அத்தியாவசியமாக இரத்தஅழுத்தக் கருவிகள் தேவை என்றும் மாதநாதோறும் டெஸ்டுகள் செய்ய வேண்டும் என்ற மாயையை உலக மக்களுக்கு கற்ப்பித்து வருகிறது.

கடைசியில் அந்த மாய முயற்சியில் தோல்வி கண்டு B.P க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி நோயாளிகளை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு சென்று விடுகின்றனர்.

10 அல்லது 15 வருடங்களாக விடாமல் BP மாத்திரைகளை சாப்பிட்டு கை கால் விழுந்த stroke, paralysis நண்பர்களையோ உறவினர்களையோ தெரிந்தவர்களையோ நாம் வாழ்க்கையில் சந்தித்து வருகின்றோம்.

இரத்தக்கசிவு மூளையில் உருவாகிறது என்று அல்லோபதி மருத்துவம் தவறான கண்ணோட்டத்தில் வைத்தியம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி இல்லை.

கல்லீரல் உடலில் வலது பக்கத்தில் அமைந்திருக்கிறது. கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால் வலது கையும் காலும் வலுவழந்து செயலற்று விடுகிறது.

மண்ணீரல் இடதுபுறம் அமைந்துள்ளது. மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டால் இடது கையும் காலும் செயலிழந்து விடுகிறது. ஒரு சிலருக்கு வலது பக்கத்தில் ஸ்ட்ரோக் வருவதும் இடது பக்கத்தில் வருவதற்கும் இதுதான் முறையான காரணமாகும்.

உறுப்புகளின் நோய்களுக்கு ஏற்றவாறு வைத்தியம் அளிப்பதன் மூலமே கல்லீரலையோ மண்ணீரலையோ புதிப்பித்து உணர்வற்ற நிலையிலிருந்து நோயாளியை மீட்க முடியும்.

மூளையில்தான் நோய் என்று நினைத்துக் கொண்டு தவறாக இரத்த ஓட்டத்திற்கு மருந்துகள் கொடுப்பதால் stroke என்ற நோயை ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது. இந்த இரண்டு உறுப்புகளுமே இரத்த ஓட்டத்திலும் இரத்தக் குழாயின் செயலாற்றும் விதத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் உள்ள அனைத்து மருத்துவமுறைகளும் இயற்கையோடு இயைந்து செயல்படுகிறது. ஆனால் ஆங்கில மருத்துவம் ஒன்றுதான் இயற்கைக்கு முரணாக மனித உயிர்களோடு விளையாடுகிறது.

மருந்துகளை சாப்பிட ஆரம்பித்து விட்டால் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் பெரிய ஆபத்து நேரிடும் மற்றும் உயிருக்கு ஆபத்ததாகி விடும். பிறகு அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்லி விடுகிறார்கள்.

சாதாரணமாக நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரை உங்களுக்கு முப்பது வயதாகி விட்டது. ஆகவே Master health checkup செய்ய வேண்டும் என்று அவரை பரிசோதிக்கிறார் ஒரு அல்லோபதி மருத்துவர்.

அவருக்கு மயக்கமோ, மார்பு படபடப்போ, தலைவலியோ, வியர்வையோ எதுவும் இல்லை. BP. Chechup செய்யும் போது 150/100 என்று காட்டுகிறது. உடனே டாக்டர் அவரிடம் உங்களுக்கு Bp சற்று கூடுதலாக இருக்கிறது.

எனவே நீங்கள் முறையாக தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு Bp யை100 என்ற அளவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார். அன்றுமுதல் அவர் நோயாளியாக்கப் படுகிறார்.

இதுவரை சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்த அவர் மாத்திரைகளை சாப்பிட்ட ஒருசில மாதங்களில் அவர் வாயுத் தொந்தரவினால் அவதிப்படுகிறார். இரவில் தூக்கம் வராமல் இருக்கிறது.

வேலைகளை செய்வதற்கு சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக இருக்கிறது.சோர்வும் அசதியும் அதிகமாக இருக்கிறது. சம்பந்தமில்லாத எண்ணங்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. மார்பு படபடப்பு அதிகமாக இருக்கிறது.

இவையெல்லாம் Bp மாத்திரைகளால் வரும் தொந்தரவுகள் ஆகும். மாத்திரைகள் சாப்பிடும் ஒவ்வொருவரும் இந்த நிலையில்தான் இருப்பார்கள்.

Bp மருந்துகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்கின்றன. இருதய இயக்கத்தையும் குறைக்கின்றன.அந்த இருதயம் இயற்கையாக இயங்குவதில் பெரும் தடையை ஏற்படுத்துகின்றன.

இதன் காரணமாக இருதய படபடப்பும் இருதய துடிப்பின் சீர்குலைவும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. சில வருடங்களில் மாரடைப்பு நோய் ஏற்படுவதை நாம் நிச்சயமாக தவிர்க்க முடியாது.

இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மாத்திரைகளை சாப்பிட்டதன் காரணமாக இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதன் விளைவாக வாயுக்கள் உருவாகின்றன.

வாயுக்கள் கலந்த இரத்த ஓட்டம் தலையின் கபாலத்தின் இரத்த நாளங்களில் செல்லும் போது அதிகமாக விரிவடைந்துள்ள உடைத்துக் கொண்டு விண் விண் என்று தெரிக்ககூடிய
"மைக்ரேய்ன்" என்னும் தீராத தலைவலியை ஏற்படுத்தும்.

மருந்துகளை நிறுத்தினால் தவிர இவ்வகை மருந்துகள் ஏற்புத்திய தலைவலியை நீக்கமுடியாது. மேலும் இரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் அனைத்தையும் நிறுத்தும் வரையில் இந்த தலைவலியை நிறுத்த முடியாது.

இவ்வாறு வாயுக்கள் கலந்ந இரத்தும் இரத்தஓண்டத்தின் வழியாக காதுகளில் உள்ள நிணநீர் குழாய்களின் வழியாக சுற்றுப் பெறும் போது போதிய உயிர் சக்தி இல்லாத காரணத்தால் காதுகளில் இருக்ககூடிய உறுப்புகள் பலவீனமடைகின்றன.

இதனால் மயக்கம், தலைசுற்றல் போன்ற மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் படுக்கையில் படுத்தால் உலகமே சுற்றுவது போன்று இருக்கும். அல்லது ஒரே நிலையில் சுற்றுவது போன்றே உணருவார்கள்.

எந்த நேரத்திலும் சடாரென்று கீழே விழுந்து மூளையில் காயம் ஏற்பட்டு இறந்து விடக் கூடிய அபாயமும் உண்டு.

எனவே மருந்து மாத்திரைகள் மற்றும் உணவில் உள்ள நச்சுக்கள் மற்றும் குளிர் பானங்களில் இருக்கூடிய நச்சுக்கள் ஆகியவை தவிர்க்கப்பட்டால் இவ்வகையான பாதகங்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

Tuesday, June 26, 2018

உப்பு

மருத்துவக் குணங்கள்:     
  1. தண்ணீரிலிருந்துதான் சுவை தோன்றுகிறது.​ அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள்.​ வருடம் என்ற காலம்,​​ ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்ச மஹா பூதங்களான நிலம்,​​ நீர்,​​ நெருப்பு,​​ வாயு,​​ ஆகாயம் இவற்றின் குணங்களின் ஏற்றத் தாழ்வின் கலப்பினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த தனிச் சுவையாகத் தோற்றம் அடைகிறது.
  2.  நீர் மற்றும் நெருப்பின் அதிகச் சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு.​ உப்புச் சுவை உமிழ் நீரை பெருகச் செய்கிறது.​ உணவிற்குச் சுவையூட்டுகிறது.​ அதிக சேர்க்கை தொண்டையையும் தாடைகளையும் எரிக்கிறது.​ உங்களைப் பொறுத்தவரை உப்புச் சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை,​​ உடலில் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக,​​ அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
  3. உப்புச் சரியான அளவில் சேர்க்கும் போது,​​ பசித்தீயைத் தூண்டுகிறது.​ நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது.​ உண்ட உணவைச் சீரணிக்க உதவுகிறது.​ வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது.​ குடல் முழுவதும் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.
  4. வியர்வை கோளங்களைச் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது.​ குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது.​ உடல் முழுவதும் விரைவில் பரவிவிடும் திறன் உடையது.​ உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளைச் சுத்தப்படுத்திவிடும்.​ ஊடுருவும் தன்மையும் சூடான வீரியமும் உள்ள உப்புச் சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் அதன் அதிக அளவிலுள்ள சேர்க்கையினால் ஏற்படும் கெடுதிகளில்-​ தலை வழுக்கை,​​ நரை,​​ நாவறட்சி,​​ உடல் எரிச்சல்,​​ மயக்கம்,​​ தோலின் மேல் பரவும் நோய்கள்,​​ வீக்கம்,​​ இசிவு எனும் கை,கால்களில் உண்டாகும் வலிப்பு நோய்,​​ பித்தம்,​​ ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் ரத்த பித்த நோய் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
  5. உணவில் நாம் பொதுவாக கடலுப்பைத்தான் பயன்படுத்துகிறோம்.​ பொதுவாக உப்பு என்றால் இந்துப்பையே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.​ ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை.​ இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.​ ஆண்மையை வளர்ப்பது.​ மனதிற்கு நல்லது.​ வாதம்,​​ பித்தம்,​​ கபம் மூன்றையும் போக்கவல்லது.​ இலேசானது,​​ சிறிதளவு உஷ்ணமுள்ளது.​ நாட்டு மருந்துக் கடைகளில் இந்துப்பு கிடைக்கிறது.
  6. அதனால் உப்பின் மீதுள்ள மோகத்தை நீங்கள் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது.​ அப்படி முடியாமல் போனால் உப்பு வகைகளில் சிறந்ததான இந்துப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.​ அயோடின் சேர்க்கை தேவை என்று கூறி அதை உப்பில் சேர்த்து விற்பதால் அதன் பயன்பாட்டையும் நாம் உதாசீனப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் அயோடின் கலந்த உப்பைச் சமையலுக்கும் சாப்பிடும்போது மேலும் உப்பு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,​​ இந்துப்பையும் சேர்க்கலாம்.
  7. கடலுப்பு சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும்.​ ஆனாலும் அது விரைவில் செரிப்பதில்லை.​ அதன் அதிக அளவிலான சேர்க்கை கபம் எனும் தோஷத்தைத் தூண்டுகிறது.​ இந்துப்பு இதற்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டுள்ளதால் கடலுப்பினால் ஏற்படும் கெடுதல்களைக் கூட இந்துப்பு குறைத்து விடக்கூடும்.​ இதைக் ​ கருத்தில் கொண்டுதான் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அஷ்ட சூரணம்,​​ ஹிங்குவசாதி,​​ வைச்வாநரம் போன்றவற்றில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது.

Monday, June 25, 2018

திருஅருட்பிரகாச வள்ளலார்
 
ன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.




திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,
பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் ள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,
தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.
ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே

ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும்.  ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!

Thursday, June 21, 2018

தமிழ் வளர்ச்சியில் இணையம்

தமிழ் வளர்ச்சிக்குக் கணினி, இணையத் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள் கடல்கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின. இணையம் உலகத்தை ஒரு சிற்றூராக்கியது.
எழுத்துருச் சிக்கல், தட்டச்சுப் பலகைச்சிக்கல் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.
தமிழ்த் தட்டச்சுப் பலகை குறித்த சிக்கல் ஓரளவு தீர்ந்த நிலையிலும் எழுத்துருச் சிக்கல் இருந்து வந்தது. முகுந்து உள்ளிட்ட பொறியாளர்களின் முயற்சியால் ஒருங்குகுறி நுட்பத்தில் தமிழ்த் தட்டச்சுக்கு வழி பிறந்ததால் (2003) தமிழில் செய்தி பரவுவதில் இருந்த தடை நீங்கியது.
அச்சு இதழ்கள்போல தமிழ் மின்னிதழ்கள் எண்ணற்றவை தோன்றின. தமிழ்ப்படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும்பங்காற்றுகின்றன.
செய்திகளையும் வலைப்பூக்கள் முந்தித் தருகின்றன. கட்டற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பூக்கள் வழங்குவதால் வலைப்பதிவர்கள் பலர் எழுத வந்தனர்.
வலைப்பூக்களில் படைப்புகள் மட்டுமன்றி படங்கள், ஓவியங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் எனப் பல வடிவில் தமிழ்ச் செய்திகள் கிடைக்கின்றன. இதனால் உலகம் முழுவதுமிருந்து தமிழ்ப்படைப்புகளும் படைப்பாளிகளும் கிடைத்தனர். அச்சுவழி கிடைத்த தமிழ்ப்படைப்புகளில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள்தான் படிக்கக் கிடைக்கும் என்ற நிலை மாறி இணையத்தால் புதுப்புது எழுத்தாளர்கள் கிடைத்தனர். தமிழ்ப்படைப்புகளின் வாசகர்தளமும் விரிவடைந்தது.
இணையம் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு வழக்கத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக மின்னஞ்சல், மின்வருடி, மென்பொருள், வன்பொருள், படிமக்கோப்பு, பதிவர், வலைப்பதிவு, வலைப்பூ, சமூக வலைத்தளம், இணையக்குழு, விசைப்பலகை, திரை, மடிக்கணினி, மேசைக்கணினி, சுட்டி முதலான சொற்கள் பயன்பாடு நோக்கித் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளன. இச்சொற்களின் வருகையால் தமிழ்மொழியில் கலைச்சொல்வளம் மிகுந்து வருகிறது.
இணையத்தின் வரவால் அச்சு வடிவ அகரமுதலிகள் போல் மின் அகரமுதலிகள் உருவாயின. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, க்ரியா அகராதி, கதிரைவேற்பிள்ளை அகராதி, வின்சுலோ அகராதி, பெப்ரிசியசு அகராதி உள்ளிட்ட அகராதிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தில் தமிழ்சார்ந்த செய்திகள் பல இடப்பட்டிருந்தாலும் இன்னும் உள்ளிட வேண்டிய செய்திகள் பல உள்ளன. உள்ளிடப்பட்டவற்றையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையளவில் குறைவாகவே உள்ளனர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் செய்ய இயலும், உரையாட இயலும் என்று தெரியாமல் கணினித்துறையில் பலர் இருப்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் இணையத்துக்கு எனப் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உத்தமம் என்ற அமைப்பு தமிழ்க்கணினி, இணையத் தொழில்நுட்பத்துக்கு என்று உலகெங்கும் பரவி வாழும் தொழில்நுட்பம் தெரிந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கணினித் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பும் தமிழ் கணினித்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது.
மதுரைத் திட்டம் என்னும் தளம் தமிழின் அரிய நூல்கள் 353-ஐ தம் பக்கத்தில் யாரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வைத்துள்ளது. தமிழ் மரபுச்செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பல இணைய தளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.
அவற்றுள் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தளம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழரின் மரபுச்செல்வங்களைத் தாங்கி அத்தளம் உள்ளது.
ஈழத்தமிழர்களின் நூல்களையும் இதழ்களையும் பாதுகாக்கும் நூலகம் என்ற தளம் அரிய நூல்களையும் இதழ்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிங்களப் பேரினவாதிகள் யாழ்ப்பாண நூலகத்தை அழித்த பிறகு இனித் தமிழர் அறிவுச்செல்வங்களை யாரும் அழிக்க இயலாதபடி நூலகம் தளத்தில் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
உலகெங்கும் எழுதும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டிகள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி என்னும் பெயர்கொண்ட திரட்டிகள் தமிழ் எழுதும் பதிவர்களின் படைப்புகளை உலக அளவில் திரட்டித் தந்து தமிழ்ப்படைப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ்ச்சொற்களை அகரவரிசையில் தரும் வண்ணம் மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன. தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. விரும்பியவண்ணம் எழுத்துகளை மாற்றித் தரும் எழுத்துமாற்றிகளும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.
இணைய வளர்ச்சியால் தமிழ் மொழி பெயர்ப்பு புதிய வீச்சும் வேகமும் பெற்றுள்ளது. தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன.
இன்றைய அனைத்து அதிர்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.