Thursday, June 28, 2018

தமிழ் மொழியின் தொன்மையும் தோற்றமும்!

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000 மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.
தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம் தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம்.
திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர். குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது.
ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர் இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும். இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன்.
அவன் கையாண்ட நாகரிகம்தான் தமிழ் நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது.

இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை.
இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே!
அம்மொழியும் தமிழ் மொழியே!
கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன.
பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல.

நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.
சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது. தொல்காப்பியம் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த குமரிமாந்தனின் காலத்தைவிட பல்லாயிரம் ஆண்டுகள் பிந்தியதே தொல்காப்பியம்.
தொல்காப்பியம் தோன்றிய காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 5-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலமாகும்.
தொல்காப்பியர் காலத்திற்கு வெகு காலத்திற்கு முன்பே தமிழ் மொழி மிகச் சிறப்புற்றிருந்தது. சிறப்பு மிக்க தமிழ் இலக்கியங்கள் பல இருந்தன.
ஆனால் அவைகள் அனைத்தும் நான்குமுறைகள் ஏற்பட்ட கடல் கோள்களால் முழுமையாக அழிவுற்றன.
மூன்று தமிழ் :
தமிழ் மொழி தோற்றத்தையும் வரலாற்றுக் காலத்தையும் பல பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1. பழந்தமிழ்
2. இடைக்காலத்தமிழ்
3. தற்காலத்தமிழ்
1. பழந்தமிழ் (Ancient Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன்பழந்தமிழ் – தொல்பழந்தமிழ் Early ancient Tamil (or) Proto Ancient Tamil
ஆ. மத்திய பழந்தமிழ் – Medieval Ancient Tamil
இ. பின்பழந்தமிழ் – Later Ancient Tamil

2. இடைக்காலத் தமிழ் (Medieval Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் இடைக்காலத் தமிழ் – Early Medieval Tamil
ஆ. மத்திய இடைக்காலத் தமிழ் – Medium Mediaval Tamil
இ. பின் இடைக்காலத் தமிழ் – Later Medieval Tamil

3. தற்காலத் தமிழ் (Mode Tamil) உட்பிரிவுகள் மூன்று.
அ. முன் தற்காலத் தமிழ் – Early Mode Tamil
ஆ. மத்திய தற்காலத் தமிழ் – Medium Mode Tamil
இ. பின் தற்காலத் தமிழ் – Later Mode Tamil

தொல்பழங்காலத்தில் தமிழ் மொழியிலிருந்து பிரிந்து, காலத்தாலும் இடமாற்றங்களாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வளர்ந்தவைகளே பிறமொழிகள்.

தமிழ் மொழி, இன்றைய தமிழ் நாட்டில் மட்டும் அல்ல அன்றைய குமரிக் கண்டமாகிய பழந்தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் பாரெங்கும் பரவியிருந்தது.
பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தூவு, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டிஷ், கயானா, மடகாஸ்கர், கிரினிடால் போன்ற உலகின் பல பகுதிகளிலும் பரவி மலர்ந்திருந்தது.
தமிழினம் மற்றும் மொழிச் சிதைவு உலகெங்கும் தன்னிகரற்ற பேரரசனாகக் கொடிகட்டிப் பறந்த தமிழினமும், அவன் தாய் மொழியாகிய தமிழ் மொழியும், நான்குமுறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்களால் அழிவுற்றது.
அப்பெரும் கடல் கோள்களால் குமரிக்கண்டம் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே பேரழிவுகளால் மலை மடுவானது, உலகின் பல நாடுகள் அழிவுற்றன. உயிரினங்கள் மாண்டன, மொழிகளும் சிதைவுற்றன.
அவ்வாறே குமரிக்கண்டமும் நீரில் மூழ்கி அழிவுற்றது. இந்த அழிவுகளால் தமிழின் மரபு, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்கள் அத்தனையும் சிதைந்து நாசமாகியது.
உலகின் பூகோள வடிவமே மாற்று வடிவம் பெற்றது. வரலாற்றுச் சான்றுகள் வரலாறு பலவகை உண்டு. அவற்றில் மொழிவரலாறும் ஒன்று.
மொழி வரலாறு என்பது மொழியின் தோற்றம், வளர்ச்சி, காலங்கள் தோறும் ஏற்படும் மொழியின் மாற்றங்கள், பிறமொழிக் கலவை, வரிவடிவ மாற்றங்கள் இப்படிப் பல மொழிச் செய்திகளை நமக்குத் தருவது மொழி வரலாறு.
ஒரு மொழியின் வரலாற்றைப் படைக்க, சான்றுகளே முக்கியப் பங்கேற்கிறது. சான்றுகளின்றிப் படைக்கப்படும் வரலாறுகள் வரலாறுகள் அல்ல, அவைகள் கதைகளாகக் கருதப்படும்.
தமிழ் மொழி வரலாற்றுச் சான்றுகள் மொழிகள் காலத்திற்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
தமிழ் மொழியின் ஆய்வினைக் கொண்ட பேரறிஞர்கள் தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிறமொழிக் கல்வெட்டுக்கள், அயல்நாட்டினர் குறிப்புகள், நடுகற்கள், அரசுச் சாசனச் செப்பேடுகள், தொல் பொருட்களின் மீது எழுதப்பட்ட வரி வடிவங்கள் போன்ற பல மொழி வரலாற்றுச் சான்றுகளைப் பயன்படுத்தி மொழி வரலாற்றைப் படைக்கின்றனர்.
ஆற்றுச் சமவெளி நாகரிகங்கள் ஒரு வரலாற்றைப் படைக்க, ஒரு நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள, ஒரு மொழியை அறிந்துகொள்ள அடிப்படையாக அமைவது ஆற்றுச் சமவெளி நாகரிகங்களே!
இத்தோடு ஒத்துழைப்புத் தருபவைகள் மொழி இலக்கணங்களும், இலக்கியங்களும், அனைத்து விதமான ஆதாரங்களைக் கொண்டு உலக வரலாற்றைக் கண்டறிந்த ஆய்வு நிபுணர்கள், மொழி வரலாற்றையும் கண்டறிந்துள்ளனர்.
மொழிகள் தோன்றிய காலம் எதுவென்று சரிவரக் கூறமுடியாத நிலை இன்னும் நீடிக்கிறது.

Wednesday, June 27, 2018

Blood Pressure ஒரு நோயல்ல

ஒரு நிறை மாத கர்பிணி ஒருவர் பிரசவிக்கும் போது தன் முழு திறனையும் உபயோகித்து முக்கும் போது அப்பெண்ணின் உடல் வியர்த்து , மூச்சு வாங்குதல், படபடப்பு அனைத்தும் ஏற்பட்டு பிறகு படிப்படியாக குறைந்து சிறிது நேரத்தில் சகஜ நிலையை அடையும்.

அந்த பெண் குழந்தையை வெளியேற்ற முயற்ச்சிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்த இரத்த அழுத்தம் அந்த நேரத்தில் அவசியமாகிறது.

ஓட்டப் பந்தய வீராங்கனை மைதானத்தில் ஓடுகிறார். வேகமாக ஓடும்போது மூச்சை அடக்கி ஓடுகிறார். ஓடி முடித்ததும் மூச்சிரைப்பு ஏற்படுகிறது படபடப்பு அதிகமாகிறது வியர்வை கொட்டுகிறது முகம் சிவந்து போகிறது

இரத்தக் குழாய்கள் அதிகம் உள்ள கழுத்து முகம் போன்ற பகுதிகளில் விண் விண் என்ற வலியுணர்வு ஏற்படுகிறது. களைப்புடன் உட்கார்ந்து விடுகின்றனர். சில நிமிடங்களுக்கு பிறகு உபாதைகள் குறைந்து உடல் சகஜ நிலையை அடைகிறது.

பிரசவிக்கக்கூடிய பெண்மணிக்கு இயற்கையாக வலிகள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. பிறகு பிரசவம் முடிந்தவுடன் இரத்த அழுத்த மாறுபாடுகள் நீங்கி உடல் மீண்டும் சகஜ நிலையை அடைகிறது.

விளையாட்டு வீராங்கனை வேகமாக ஓட வேண்டும் என்ற உந்துதல் காரணமாக தானே உடலை அதிகமாக இயங்க வைக்கிறார். அதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகமாகிறது.

மூச்சு வாங்குதல் படபடப்பு வியர்வை போன்ற அசௌகரியங்கள் தற்காலிகமாக ஏற்பட்டாலும் அது உடலை பாதிப்பதில்லை. மீண்டும் பழைய நிலையை அடைந்து விடுகிறது.

நுரையீரல் காற்று என்னும் மூலப் பொருளுடன் சம்பந்தப்பட்ட உள்ளுறுப்பு. இது ஐம்புலன்களின் ஒன்றான மூக்கின் வழியாக வெளி உலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.

நுரையீரல் வாயு மண்டலத்தில் உள்ள காற்றுடன் இணக்கத்துடனும் நல்ல தொடர்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் நோய்கள் ஏற்படுவதில்லை.

எப்போது வாயு மண்டலத்தில் உள்ள காற்று நமது உடலுக்கு ஏற்புடையதாக இல்லையோ அப்போதுதான் மூக்கடைப்பு, சளி, தும்மல் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டு நுரையீரல் நோய் உருவாகிறது.

ஜலதோஷம் பிடிக்கும் போது நுரையீரல்களின் பாதிப்பை நீக்குவதற்காக இயற்கையான இரத்த ஓட்டத்திற்கும் அதிகப்படியான இரத்தம் நோய்களை விரட்ட தேவைப்படுகிறது. அதன் மூலம் நோயை எதிர்த்து போராடுகிறது.

இந்த அதிகப்படியான இரத்த ஓட்டம் இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. நோய் குறையும் வரை இந்த இரத்த அழுத்தம் தேவைப்படுகிறது. இந்த இரத்த அழுத்தம் நோயிலிருந்து மனிதனைக் காப்பாற்ற உடல் எடுத்துக் கொள்ளும் இயற்கையான முயற்சியாகும்.

இன்று புரிந்து கொள்ளுங்கள் இரத்த அழுத்தம் (blood pressure) என்பது நோயல்ல. நம் உடலில் உள்ள நோயை நீக்குவதற்காக உடல் ஏற்படுத்தும் நல்ல முயற்சியாகும்.

இரத்த அழுத்தம் அதிகமாகியும் தும்மல், சளி, இருமல் போன்ற உபாதைகளை நுரையீரல் நீக்க முடியாவிட்டால் நோய்கள் தீவிரமடைய ஆரம்பித்து விடும். ஆப்போதுதான் மூக்கடைப்பு, தீராத சளி, ஆஸ்துமா என்று உருவெடுக்கின்றன.

அப்போது இரத்த அழுத்தம் அதிகமாகி இரத்தக் கொதிப்பாக மாறுகிறது. எத்தனை நாட்கள் சளி உபத்திரங்கள் உடலை விட்டு நீங்கவில்லையோ அத்தனை நாட்களிலும் இரத்தக் கொதிப்பும் உடலில் சேர்ந்துதான் இருக்கும்.

ஜலதோஷம் போன்ற நோய்களை ஒரு உருவமாக எடுத்துக் கொண்டால் அதன் நிழல்தான் இரத்தக்கொதிப்பு , இவை இரண்டையும் பிரிக்கமுடியாது. சளியை குணப்படுத்தாமல் இரத்தக்கொதிப்பை மட்டும் நீக்க முடியாது.

சளியை குணப்படுத்தினால் இரத்தக்கொதிப்பு தானே அடங்கி விடும். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் இதை மூக்கடைப்பு என்றும் ஆஸ்த்துமா என்றும் தனித்தனியாக பட்டியலிடுவார்கள். அதற்கு தன்த்தனியாக மருந்துகள் கொடுப்பார்கள்.

நுரையீரலுக்கு சக்தியளிக்கத் தெரியாதவரை எந்தவொரு நோயையும் ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியவில்லை. அதனால்தான் ஆங்கில மருத்துவத்தில் நோய்கள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன.

ஆங்கில மருத்துவம்தான் இதை ஒரு நோயாகவும் அதை கண்டுபிடிக்க அத்தியாவசியமாக இரத்தஅழுத்தக் கருவிகள் தேவை என்றும் மாதநாதோறும் டெஸ்டுகள் செய்ய வேண்டும் என்ற மாயையை உலக மக்களுக்கு கற்ப்பித்து வருகிறது.

கடைசியில் அந்த மாய முயற்சியில் தோல்வி கண்டு B.P க்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி நோயாளிகளை விரக்தியின் விளிம்பிற்கே கொண்டு சென்று விடுகின்றனர்.

10 அல்லது 15 வருடங்களாக விடாமல் BP மாத்திரைகளை சாப்பிட்டு கை கால் விழுந்த stroke, paralysis நண்பர்களையோ உறவினர்களையோ தெரிந்தவர்களையோ நாம் வாழ்க்கையில் சந்தித்து வருகின்றோம்.

இரத்தக்கசிவு மூளையில் உருவாகிறது என்று அல்லோபதி மருத்துவம் தவறான கண்ணோட்டத்தில் வைத்தியம் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்படி இல்லை.

கல்லீரல் உடலில் வலது பக்கத்தில் அமைந்திருக்கிறது. கல்லீரல் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டால் வலது கையும் காலும் வலுவழந்து செயலற்று விடுகிறது.

மண்ணீரல் இடதுபுறம் அமைந்துள்ளது. மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டால் இடது கையும் காலும் செயலிழந்து விடுகிறது. ஒரு சிலருக்கு வலது பக்கத்தில் ஸ்ட்ரோக் வருவதும் இடது பக்கத்தில் வருவதற்கும் இதுதான் முறையான காரணமாகும்.

உறுப்புகளின் நோய்களுக்கு ஏற்றவாறு வைத்தியம் அளிப்பதன் மூலமே கல்லீரலையோ மண்ணீரலையோ புதிப்பித்து உணர்வற்ற நிலையிலிருந்து நோயாளியை மீட்க முடியும்.

மூளையில்தான் நோய் என்று நினைத்துக் கொண்டு தவறாக இரத்த ஓட்டத்திற்கு மருந்துகள் கொடுப்பதால் stroke என்ற நோயை ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது. இந்த இரண்டு உறுப்புகளுமே இரத்த ஓட்டத்திலும் இரத்தக் குழாயின் செயலாற்றும் விதத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் உள்ள அனைத்து மருத்துவமுறைகளும் இயற்கையோடு இயைந்து செயல்படுகிறது. ஆனால் ஆங்கில மருத்துவம் ஒன்றுதான் இயற்கைக்கு முரணாக மனித உயிர்களோடு விளையாடுகிறது.

மருந்துகளை சாப்பிட ஆரம்பித்து விட்டால் நிறுத்தக் கூடாது. நிறுத்தினால் பெரிய ஆபத்து நேரிடும் மற்றும் உயிருக்கு ஆபத்ததாகி விடும். பிறகு அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று சொல்லி விடுகிறார்கள்.

சாதாரணமாக நல்ல உடல் நலத்துடன் இருக்கும் ஒருவரை உங்களுக்கு முப்பது வயதாகி விட்டது. ஆகவே Master health checkup செய்ய வேண்டும் என்று அவரை பரிசோதிக்கிறார் ஒரு அல்லோபதி மருத்துவர்.

அவருக்கு மயக்கமோ, மார்பு படபடப்போ, தலைவலியோ, வியர்வையோ எதுவும் இல்லை. BP. Chechup செய்யும் போது 150/100 என்று காட்டுகிறது. உடனே டாக்டர் அவரிடம் உங்களுக்கு Bp சற்று கூடுதலாக இருக்கிறது.

எனவே நீங்கள் முறையாக தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு Bp யை100 என்ற அளவில் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறார். அன்றுமுதல் அவர் நோயாளியாக்கப் படுகிறார்.

இதுவரை சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்த அவர் மாத்திரைகளை சாப்பிட்ட ஒருசில மாதங்களில் அவர் வாயுத் தொந்தரவினால் அவதிப்படுகிறார். இரவில் தூக்கம் வராமல் இருக்கிறது.

வேலைகளை செய்வதற்கு சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக இருக்கிறது.சோர்வும் அசதியும் அதிகமாக இருக்கிறது. சம்பந்தமில்லாத எண்ணங்கள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. மார்பு படபடப்பு அதிகமாக இருக்கிறது.

இவையெல்லாம் Bp மாத்திரைகளால் வரும் தொந்தரவுகள் ஆகும். மாத்திரைகள் சாப்பிடும் ஒவ்வொருவரும் இந்த நிலையில்தான் இருப்பார்கள்.

Bp மருந்துகள் இரத்த நாளங்களை விரிவடையச் செய்கின்றன. இருதய இயக்கத்தையும் குறைக்கின்றன.அந்த இருதயம் இயற்கையாக இயங்குவதில் பெரும் தடையை ஏற்படுத்துகின்றன.

இதன் காரணமாக இருதய படபடப்பும் இருதய துடிப்பின் சீர்குலைவும் தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. சில வருடங்களில் மாரடைப்பு நோய் ஏற்படுவதை நாம் நிச்சயமாக தவிர்க்க முடியாது.

இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மாத்திரைகளை சாப்பிட்டதன் காரணமாக இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதன் விளைவாக வாயுக்கள் உருவாகின்றன.

வாயுக்கள் கலந்த இரத்த ஓட்டம் தலையின் கபாலத்தின் இரத்த நாளங்களில் செல்லும் போது அதிகமாக விரிவடைந்துள்ள உடைத்துக் கொண்டு விண் விண் என்று தெரிக்ககூடிய
"மைக்ரேய்ன்" என்னும் தீராத தலைவலியை ஏற்படுத்தும்.

மருந்துகளை நிறுத்தினால் தவிர இவ்வகை மருந்துகள் ஏற்புத்திய தலைவலியை நீக்கமுடியாது. மேலும் இரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகள் அனைத்தையும் நிறுத்தும் வரையில் இந்த தலைவலியை நிறுத்த முடியாது.

இவ்வாறு வாயுக்கள் கலந்ந இரத்தும் இரத்தஓண்டத்தின் வழியாக காதுகளில் உள்ள நிணநீர் குழாய்களின் வழியாக சுற்றுப் பெறும் போது போதிய உயிர் சக்தி இல்லாத காரணத்தால் காதுகளில் இருக்ககூடிய உறுப்புகள் பலவீனமடைகின்றன.

இதனால் மயக்கம், தலைசுற்றல் போன்ற மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் படுக்கையில் படுத்தால் உலகமே சுற்றுவது போன்று இருக்கும். அல்லது ஒரே நிலையில் சுற்றுவது போன்றே உணருவார்கள்.

எந்த நேரத்திலும் சடாரென்று கீழே விழுந்து மூளையில் காயம் ஏற்பட்டு இறந்து விடக் கூடிய அபாயமும் உண்டு.

எனவே மருந்து மாத்திரைகள் மற்றும் உணவில் உள்ள நச்சுக்கள் மற்றும் குளிர் பானங்களில் இருக்கூடிய நச்சுக்கள் ஆகியவை தவிர்க்கப்பட்டால் இவ்வகையான பாதகங்களிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.

Tuesday, June 26, 2018

உப்பு

மருத்துவக் குணங்கள்:     
  1. தண்ணீரிலிருந்துதான் சுவை தோன்றுகிறது.​ அது முதலில் தனிப்பட்ட முறையில் அறியப்படாத ஒரு பொருள்.​ வருடம் என்ற காலம்,​​ ஆறு பருவங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் பஞ்ச மஹா பூதங்களான நிலம்,​​ நீர்,​​ நெருப்பு,​​ வாயு,​​ ஆகாயம் இவற்றின் குணங்களின் ஏற்றத் தாழ்வின் கலப்பினாலும் சுவை என்பது இனிப்பு முதலான ஆறு தனித்த தனிச் சுவையாகத் தோற்றம் அடைகிறது.
  2.  நீர் மற்றும் நெருப்பின் அதிகச் சேர்க்கையினால் ஏற்படும் சுவை உப்பு.​ உப்புச் சுவை உமிழ் நீரை பெருகச் செய்கிறது.​ உணவிற்குச் சுவையூட்டுகிறது.​ அதிக சேர்க்கை தொண்டையையும் தாடைகளையும் எரிக்கிறது.​ உங்களைப் பொறுத்தவரை உப்புச் சுவையிலுள்ள நீர் மற்றும் நெருப்பின் தேவை,​​ உடலில் ஏதோ ஒரு பகுதியின் தேய்மானத்தை ஈடுகட்டுவதற்காக,​​ அதன் மீது நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
  3. உப்புச் சரியான அளவில் சேர்க்கும் போது,​​ பசித்தீயைத் தூண்டுகிறது.​ நாக்கிலுள்ள ருசி கோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது.​ உண்ட உணவைச் சீரணிக்க உதவுகிறது.​ வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது.​ குடல் முழுவதும் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.
  4. வியர்வை கோளங்களைச் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது.​ குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது.​ உடல் முழுவதும் விரைவில் பரவிவிடும் திறன் உடையது.​ உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளைச் சுத்தப்படுத்திவிடும்.​ ஊடுருவும் தன்மையும் சூடான வீரியமும் உள்ள உப்புச் சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் அதன் அதிக அளவிலுள்ள சேர்க்கையினால் ஏற்படும் கெடுதிகளில்-​ தலை வழுக்கை,​​ நரை,​​ நாவறட்சி,​​ உடல் எரிச்சல்,​​ மயக்கம்,​​ தோலின் மேல் பரவும் நோய்கள்,​​ வீக்கம்,​​ இசிவு எனும் கை,கால்களில் உண்டாகும் வலிப்பு நோய்,​​ பித்தம்,​​ ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் ரத்த பித்த நோய் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.
  5. உணவில் நாம் பொதுவாக கடலுப்பைத்தான் பயன்படுத்துகிறோம்.​ பொதுவாக உப்பு என்றால் இந்துப்பையே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.​ ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை.​ இந்துப்பு சிறிதளவு சுவையுடையது.​ ஆண்மையை வளர்ப்பது.​ மனதிற்கு நல்லது.​ வாதம்,​​ பித்தம்,​​ கபம் மூன்றையும் போக்கவல்லது.​ இலேசானது,​​ சிறிதளவு உஷ்ணமுள்ளது.​ நாட்டு மருந்துக் கடைகளில் இந்துப்பு கிடைக்கிறது.
  6. அதனால் உப்பின் மீதுள்ள மோகத்தை நீங்கள் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது.​ அப்படி முடியாமல் போனால் உப்பு வகைகளில் சிறந்ததான இந்துப்பை நீங்கள் பயன்படுத்தலாம்.​ அயோடின் சேர்க்கை தேவை என்று கூறி அதை உப்பில் சேர்த்து விற்பதால் அதன் பயன்பாட்டையும் நாம் உதாசீனப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் அயோடின் கலந்த உப்பைச் சமையலுக்கும் சாப்பிடும்போது மேலும் உப்பு வேண்டும் என்று நீங்கள் விரும்பினால்,​​ இந்துப்பையும் சேர்க்கலாம்.
  7. கடலுப்பு சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும்.​ ஆனாலும் அது விரைவில் செரிப்பதில்லை.​ அதன் அதிக அளவிலான சேர்க்கை கபம் எனும் தோஷத்தைத் தூண்டுகிறது.​ இந்துப்பு இதற்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டுள்ளதால் கடலுப்பினால் ஏற்படும் கெடுதல்களைக் கூட இந்துப்பு குறைத்து விடக்கூடும்.​ இதைக் ​ கருத்தில் கொண்டுதான் சில ஆயுர்வேத மருந்துகளாகிய அஷ்ட சூரணம்,​​ ஹிங்குவசாதி,​​ வைச்வாநரம் போன்றவற்றில் இந்துப்பு சேர்க்கப்படுகிறது.

Monday, June 25, 2018

திருஅருட்பிரகாச வள்ளலார்
 
ன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.




திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.
நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,
பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே

என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் ள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,
தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்

ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே

ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.
ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.


நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே

ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும்.  ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!

Thursday, June 21, 2018

தமிழ் வளர்ச்சியில் இணையம்

தமிழ் வளர்ச்சிக்குக் கணினி, இணையத் தொழில்நுட்பம் பெரிதும் பயன்படுகிறது. இணையம் வந்த பிறகுதான் தமிழ்த் தகவல்கள் கடல்கடந்த நாடுகளுக்கு உடனுக்குடன் பரவின. இணையம் உலகத்தை ஒரு சிற்றூராக்கியது.
எழுத்துருச் சிக்கல், தட்டச்சுப் பலகைச்சிக்கல் தொடக்கத்தில் இருந்தன. இதனால் பல தமிழ் மென்பொருள்கள் உலகம் முழுவதும் தமிழர்களாலும் தமிழ் ஆர்வலர்களாலும் உருவாக்கப்பட்டன.
தமிழ்த் தட்டச்சுப் பலகை குறித்த சிக்கல் ஓரளவு தீர்ந்த நிலையிலும் எழுத்துருச் சிக்கல் இருந்து வந்தது. முகுந்து உள்ளிட்ட பொறியாளர்களின் முயற்சியால் ஒருங்குகுறி நுட்பத்தில் தமிழ்த் தட்டச்சுக்கு வழி பிறந்ததால் (2003) தமிழில் செய்தி பரவுவதில் இருந்த தடை நீங்கியது.
அச்சு இதழ்கள்போல தமிழ் மின்னிதழ்கள் எண்ணற்றவை தோன்றின. தமிழ்ப்படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக அளவில் அறிமுகப்படுத்துவதில் வலைப்பூக்கள் பெரும்பங்காற்றுகின்றன.
செய்திகளையும் வலைப்பூக்கள் முந்தித் தருகின்றன. கட்டற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் தன்னுரிமையை வலைப்பூக்கள் வழங்குவதால் வலைப்பதிவர்கள் பலர் எழுத வந்தனர்.
வலைப்பூக்களில் படைப்புகள் மட்டுமன்றி படங்கள், ஓவியங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகள் எனப் பல வடிவில் தமிழ்ச் செய்திகள் கிடைக்கின்றன. இதனால் உலகம் முழுவதுமிருந்து தமிழ்ப்படைப்புகளும் படைப்பாளிகளும் கிடைத்தனர். அச்சுவழி கிடைத்த தமிழ்ப்படைப்புகளில் குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகள்தான் படிக்கக் கிடைக்கும் என்ற நிலை மாறி இணையத்தால் புதுப்புது எழுத்தாளர்கள் கிடைத்தனர். தமிழ்ப்படைப்புகளின் வாசகர்தளமும் விரிவடைந்தது.
இணையம் சார்ந்த பல கலைச்சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டு வழக்கத்துக்கு வந்துள்ளன. குறிப்பாக மின்னஞ்சல், மின்வருடி, மென்பொருள், வன்பொருள், படிமக்கோப்பு, பதிவர், வலைப்பதிவு, வலைப்பூ, சமூக வலைத்தளம், இணையக்குழு, விசைப்பலகை, திரை, மடிக்கணினி, மேசைக்கணினி, சுட்டி முதலான சொற்கள் பயன்பாடு நோக்கித் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளன. இச்சொற்களின் வருகையால் தமிழ்மொழியில் கலைச்சொல்வளம் மிகுந்து வருகிறது.
இணையத்தின் வரவால் அச்சு வடிவ அகரமுதலிகள் போல் மின் அகரமுதலிகள் உருவாயின. சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி, க்ரியா அகராதி, கதிரைவேற்பிள்ளை அகராதி, வின்சுலோ அகராதி, பெப்ரிசியசு அகராதி உள்ளிட்ட அகராதிகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ் இணையத்தில் தமிழ்சார்ந்த செய்திகள் பல இடப்பட்டிருந்தாலும் இன்னும் உள்ளிட வேண்டிய செய்திகள் பல உள்ளன. உள்ளிடப்பட்டவற்றையும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையளவில் குறைவாகவே உள்ளனர். தமிழைப் பயன்படுத்தி மின்னஞ்சல் செய்ய இயலும், உரையாட இயலும் என்று தெரியாமல் கணினித்துறையில் பலர் இருப்பதையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழ் இணையத்தை வளர்த்தெடுக்கப் பல மாநாடுகள், கருத்தரங்குகள், பயிலரங்குகள், வலைப்பதிவர் சந்திப்புகள் நடத்தப்பட்டன. தமிழ் இணையத்துக்கு எனப் பல்வேறு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. உத்தமம் என்ற அமைப்பு தமிழ்க்கணினி, இணையத் தொழில்நுட்பத்துக்கு என்று உலகெங்கும் பரவி வாழும் தொழில்நுட்பம் தெரிந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கணினித் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பும் தமிழ் கணினித்துறை வளர்ச்சிக்கு உதவுகிறது.
மதுரைத் திட்டம் என்னும் தளம் தமிழின் அரிய நூல்கள் 353-ஐ தம் பக்கத்தில் யாரும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வைத்துள்ளது. தமிழ் மரபுச்செல்வங்களை வெவ்வேறு வடிவங்களில் தரும் வண்ணம் பல இணைய தளங்கள் தமிழ்ச் செய்திகளைத் திரட்டிப் பாதுகாத்து வருகின்றன.
அவற்றுள் தமிழ் மரபு அறக்கட்டளை என்ற தளம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், படங்கள், ஒலிப்பதிவுகள் எனத் தமிழரின் மரபுச்செல்வங்களைத் தாங்கி அத்தளம் உள்ளது.
ஈழத்தமிழர்களின் நூல்களையும் இதழ்களையும் பாதுகாக்கும் நூலகம் என்ற தளம் அரிய நூல்களையும் இதழ்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சிங்களப் பேரினவாதிகள் யாழ்ப்பாண நூலகத்தை அழித்த பிறகு இனித் தமிழர் அறிவுச்செல்வங்களை யாரும் அழிக்க இயலாதபடி நூலகம் தளத்தில் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
உலகெங்கும் எழுதும் வலைப்பதிவுகளைத் திரட்டித் தரும் திரட்டிகள் தமிழ்மொழிக்கென உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி என்னும் பெயர்கொண்ட திரட்டிகள் தமிழ் எழுதும் பதிவர்களின் படைப்புகளை உலக அளவில் திரட்டித் தந்து தமிழ்ப்படைப்புகளுக்கு உலக அளவில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தமிழ்ச்சொற்களை அகரவரிசையில் தரும் வண்ணம் மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன. தட்டச்சிட்டால் ஒலித்துக்காட்டும் மென்பொருள்கள் வெளிவந்துள்ளன. விரும்பியவண்ணம் எழுத்துகளை மாற்றித் தரும் எழுத்துமாற்றிகளும் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன.
இணைய வளர்ச்சியால் தமிழ் மொழி பெயர்ப்பு புதிய வீச்சும் வேகமும் பெற்றுள்ளது. தமிழ்க்கல்வியை எளிமைப்படுத்தி வழங்கும் வகையில் பல இணையதளங்கள் உள்ளன.
இன்றைய அனைத்து அதிர்வுகளையும் உலக அளவில் உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளும் இணையத்திற்கு ஈடுகொடுத்துள்ள தமிழ் வளர்ச்சி வருங்காலத்தில் இன்னும் விரைவாக இருக்கும்.

நாட்டுபுறப் பாடல்கள்

தாலாட்டு பாடல்

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..


 ஏசல் பாடல்
 
செக்கச் சிவந்திருப்பாள் - குட்டி
..செட்டிமகள் போலிருப்பாள்
வாரி முடிஞ்சிருப்பாள்- குட்டி
...வந்திருப்பாள் சந்தைக்கடை

சந்தையிலே மருக்கொழுந்து - குட்டி
... சரசமாத்தான் விற்குதடி!
கையிலொரு காசுமில்லை-குட்டி
... கடன்கொடுப்பார் யாருமில்லை!

வட்டவட்டப் பாறையிலே- குட்டி
... வரகரிசி தீட்டையிலே
ஆர்கொடுத்த சாயச்சீலை - குட்டி
... ஆலவட்டம் போடுதடி!

குழந்தைப் பாடல்

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
அன்னக்கிளியே சாய்ந்தாடு
ஆவாரம்பூவே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோயில் புறாவே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
தாமரைப்பூவே சாய்ந்தாடு
குத்துவிளக்கே சாய்ந்தாடு
கோயிற் புறாவே சாய்ந்தாடு
பச்சைக்கிளியே சாய்ந்தாடு
பவழக்கொடியே சாயந்தாடு
சோலைக்குயிலே சாய்ந்தாடு
சுந்தரமயிலே சாய்ந்தாடு
கண்ணே மணியே சாய்ந்தாடு
கற்பகக் கொடியே சாய்ந்தாடு
கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
கனியே பாலே சாய்ந்தாடு.

புவி வெப்பமயமாதல் -

நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல்.

புவிவெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கும்
.
1850 இன் பின்னர் புவியின் மேற்பரப்பு சராசரி வெப்பநிலை 10 செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை வளிமண்டலத்திலுள்ள கார்பனின் செறிவும் 28 சதவிதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பாதியில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விளைவு.குறிப்பிட்டு சொல்ல கூடிய வகையில் பூமியின் வெப்ப நிலை 1oC - 4oC ஆக உயரும் என்று கணக்கிடபட்டுள்ளது.உலக சராசரி வெப்பநிலை உயர்வு 2100 ஆம் ஆண்டில் 4 டிகிரி செல்சியஸ் (7.2 ° F) வரை ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல் காரணம்

நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்ளவும், நாம் உட்கொள்ளும் ஆக்சிஜனை கொடுக்கவும் ஏராளமான தாவரங்களும், மரங்களும் இருந்தன. ஒரு இயற்கை சமநிலை இருந்தது.
ஆனால், காலம் செல்ல செல்ல காடுகளை அழித்தல்,

தொழிற்சாலைகளை நிறுவி பெருமளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேற்றம்,

செயற்கை உரங்களை அதிகளவு பயன்படுத்துதல்,

பிளாஸ்டிக்(நெகிழி) பயன்பாடு உள்ளிட்டவைகளால் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. இதனால் பூமியின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது .

இந்த வாயுக்கள் சூரியனில் இருந்து வரும் வெப்ப கதிர்வீச்சுக்களை எந்த தடையும் இன்றி உட்செலுத்தியும், பூமி வெளியே எதிரொலிக்கும் வெப்பத்தை வெளிவிடாமல் செய்வதால் இந்த விளைவு ஏற்படுகிறது.

இவை, பூமியில் இருந்து 15 - 60 கிலோமீட்டர் உயரத்தில் உள்ளதும் சூரியனிடம் இருந்து வரக்கூடிய புற ஊதாக் கதிர்களை தடுத்து நிறுத்தி, பூமிக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போன்று விளங்கும் ஓசோன் படலத்தை தாக்குகின்றன.இதனால், பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதோடு, தோல் புற்றுநோய், எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும்.

பசுமை இல்ல வாயுக்கள் அல்லது பைங்குடில் வாயுக்கள் என்பது

மிக முக்கியமான கிரீன்ஹவுஸ் வாயு உண்மையில் நீராவி, குறிப்பிடத்தக்க அளவில் மனித குலத்தின் மூலம் நேரடியாக வெளி இடப்படும் , கார்பன் டை ஆக்சைடு (CO2) வளிமண்டல நிலைகளில் கூட சற்று அதிகரிக்கும் வெப்பநிலை கணிசமான அதிகரிப்பை ஏற்படுத்தும்.

நீராவி, 36-70%
கார்பன் டை ஆக்சைடு, 9-26%
மீத்தேன், 4-9%
ஓசோன், 3-7%

• மேலும் இதற்கு காரணமாக உள்ள வாயுகள் மீத்தேன் (CH 4), நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O), ஹைட்ரோஃபுளோரோ கார்பன் (HFC),பெர்ஃபுளோரோ கார்பன் (PFCs), சல்பர் ஹெக்சா ஃபுளோரைடு (எஸ்எஃப் 6)

மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதன் மூலமாக அதிகரித்து வரும் மின் பயன்பாடு, அதன் விளைவாக எரிக்கப்படும் நிலக்கரி மற்றும் எரிபொருள்களினால் வெளியேற்றப்படும் வாயுக்களாலும், மனிதர்களின் அதிகரித்து வரும் வாகன பயன்பாடுகளும், அதன் விளைவாக வெளியேற்றப்படும் வாயுக்களாலும், இயற்கையாக மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மூலமாக வெளிப்படும் மீதேன் என்னும் வாயுவினாலும், இந்த பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக தோன்றுகின்றன.

புவி வெப்பமயமாதலின் விளைவுகள்:

வரலாறு காணாத முறையில் அதிகரித்து வரும் வெப்பநிலை, உயர்ந்து வரும் கடல் மட்டம், வட துருவத்தில் குறைந்து வரும் பனியின் அளவு ஆகியவற்றின் மூலம் தெளிவான பின் விளைவுகள் தெரியத் துவங்கிவிட்டன.

பனிப்பாறைகள் குறைந்து மறைந்து போகுதல்-

வரலாற்றில் பின்னோக்கி பார்க்கும் போது அதாவது 1850 லிருந்து1550 வரையான ஆண்டுக்காலத்தில் மிகவும் குளுமையான சமயத்தில் பனிப்பாறைகள் உருவாகின. இந்த சமயத்தை குறுகிய பனிக்காலம் என்று அழைக்கலாம். 1940 ஆம் ஆண்டு வரை உலகமெங்கும் இருந்த பனிப்பாறைகள் தட்ப வெப்பம் அதிகரிக்கும் போது குறையத் தொடங்கின.உலகம் எங்கும் லேசாக 1950 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை குளிரத் தொடங்கியதால் க்லேஸியர் ரிட்ரீட் பல நிகழ்வுகளில் குறையத்தொடங்கி இருந்தது .1980 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் குறைவு மிகவும் விரைவாக நடக்கத் துவங்கியுள்ளது. இதனால் உலகிலுள்ள பல பெரும் பனிப்பாறைகளின் இருப்பு அச்சுறுத்தப்பட்டுள்ளன .1995 ஆம் ஆண்டு முதல் இந்த செய்முறை அதிவேகமாக நடை பெற்று வருகின்றது

கடல்கள்-

புவி வெப்பமடைதலில் கடலின் பங்கைப் பற்றி கூறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.இந்த கடல்கள் கரியமிலவாயு கரையும் இடமாக இருக்கின்றன, இது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO 2 வை தன்னுள் இழுத்து கடல் அமிலமாக மாற வைக்கிறது. கடலின் வெட்பம் அதிகரிக்கும் போது காற்றுமண்டலத்தில் அதிகமாக இருக்கும் CO 2 வை அதனால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. புவி வெப்பமடைவதால் ஏராளமான தாக்கங்கள் கடலின் மேல் ஏற்படுகின்றன.வெப்பம் அதிகமாகுதலும், பனிக்கட்டிகளும் பனித் தகடுகள் உருகுதலாலும், கடல் மேற்பரப்பு சூடாகுவதாலும், வெப்ப நிலை அதிகரிப்பதாலும் கடல் மட்டம் உயருகின்றது. இது தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு தாக்கமாகும்.இந்த தாக்கத்தினால், கடல் சுற்றோட்டத்தில் பெருமளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது .

1961 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை, உலக கடல் வெப்பம் மேற்பரப்பிலிருந்து 700 மீட்டர் ஆழம் வரை 0.10 ° சி உயர்ந்துள்ளது

தீர்வுகள்:

மனிதர்களும், மனிதர்களின் செயல்களும் தான் உலக வெப்பமயமாதலின் முழு காரணம் என்பது தெளிவு.

இதற்கான முழு தீர்வுகள், அரசியல், பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புகளில் ஏற்பட வேண்டிய மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.

பசுமை கூடக வாயுக்களை நிறுத்தினாலும், வெப்ப உயர்வு உடனே நின்று விடாது, காலத்தால் இந்த வெப்பநிலை குறைவதற்கு இன்னும் சில காலமாகும்.இப்போது உலக அளவில் இந்த வாயுக்களின் அளவை 450 முதல் 550 பிபிஎம் ஆக நிறுத்துவது (குறைப்பது) தான் முதல் தீர்வாக கொண்டுள்ளனர்.இதன் தற்போதய அளவு 380 ஆக உள்ளது.

அரசாங்கமும், பல சமூக அமைப்புக்களும் இந்த பணியில் தீவிரமாக பணி ஆற்றிவருகின்றன, இன்னும் முக்கியமான சில மாற்றங்களான, இயற்கை வேளாண்மை, சூரிய சக்தி, இயற்கை பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கும் நடவடிக்கைகள், இவற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தை குறைக்க முடியும்.

"புவி வெப்பமடைவதைத் தடுக்க, பூமி அழியாமல் காக்க நாம் செய்யக்கூடிய சில எளிய செயல்கள்:

தேவையில்லாமல் இயங்கும் மின்கருவிகளை அணைக்க வேண்டும் .

குண்டு மின் விளக்குகளை மாற்றி CFL விளக்குகளைப் பொருத்தலாம் .

மின்கருவிகள் வாங்கும் போது பிஇஇ முத்திரை 4 அல்லது 5 நட்சத்திரம் உள்ளதாக வாங்க வேண்டும்.

குப்பையைக் குறைத்து முடிந்தவரை . கடைக்குப் போகும்போது கையோடு துணிப்பையை எடுத்துச்சென்று பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும்.

போக்குவரத்திற்கு பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தலாம்.

குறைப்பது (Reduce)

மின் மற்றும் மின்னியல் சாதனங்களின் உற்பத்தியை குறைக்க வேண்டும். இதற்கு பொருள் நாம் மின்னியல் சாதனங்களின் தேவையில்லாத பயன்பாட்டை தவிர்க்கவேண்டும். நம்மால் முடிந்தவரை மின்னியல் சாதனங்களின் ஆயுள்காலத்தை அதிகமாக்க வேண்டும்.
.
மறு பயன்பாடு (Recovery)

மின்னியல் சாதனங்களை திரும்ப திரும்ப சரிசெய்து உபயோகிக்க வேண்டும். வளர்ந்த நாடுகள் தங்களிடம் உபயோகிக்கும் நிலையில் உள்ள மின்னியல் கழிவுகளை பின் தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு உபயோகப்படுத்த கொடுக்க வேண்டும்.

மீள் சுழற்சி (Recycle)

மீள்சுழற்சி என்பது மின்னியல் கழிவுகளிலிருந்து மூலப்பொருட்களை பிரித்தெடுத்தல். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்னியல் கழிவுகளில் உள்ள உலோகங்களையும் தாதுக்களையும் மற்ற வளங்களையும் பிரித்தெடுக்க வேண்டும். அதற்கு சிறந்த மறுசுழற்சி தொழில்நுட்பங்களுடனும் பாதுகாப்புடனும் தொழிற்கூடங்கள் அமைந்திருக்க வேண்டும்.

Wednesday, June 20, 2018

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்


முனைவர். துரை. மணிகண்டன்.

உதவிப் பேராசியர், தமிழ்த்துறை,

டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி)

இலால்குடி, திருச்சிராப்பள்ளி.

மின்னஞ்சல்: mkduraimani@gmail.com

___________________________________________________________

முன்னுரை

21ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இட்தைப் பெற்றிருப்பது இணையமாகும்.தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம், பாராமல் உலக மக்களுக்குச் செய்து வருகின்றது. இது விஞ்ஞானம், அறிவியல்,கணக்குகள் என்ற ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்குப் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது. நெடிய பாரம்பரிய மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப்பெற்று வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு ’வலைப்பூக்கள்’ என்ற புதிய இலக்கிய வகை தோன்றி பெரும் பங்காற்றிவருகிறது.வலைப்பூக்கள் என்றால் என்ன?அதன் தோற்றம், தமிழில் தோன்றிய வரலாறு,மற்றும் அதன் வகைகளாக இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள்,பக்தி, ஆன்மீகம், கணிப்பொறி, மருத்துவம், பல்சுவைச் சார்ந்த வலைப்பூக்கள் என பகுக்கப்பட்டு ஒவ்வொன்றின் தமிழ் பயன்பாட்டையும் எடுத்து விளக்க இக்கட்டுரை விளைகிறது.

வலைப்பூ

ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும்.இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாதது” என்று டாக்டர் வா.செ.குழைந்தைசாமி அவர்களின் கூற்றின்படி நாம் இன்றையப் பணியை இன்றைய கருவிக்கொண்டு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்தான் நாம் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதில் வலைப்பூக்கள் என்ற ஒரு தனி இலக்கிய வகைத்தோன்றியுள்ளன. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணைய வழியிலான ஒரு சேவையே வலைப்பூ என்பதாகும்.

வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் (Blog) என்கிறார்கள். இதன் மூலம் வெப்பிளாக் (Webblog) என்பதாகும். 17-12-1997-ல் ஜார்ன் பெர்கர் (John Barger) என்பவர்தான் வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார். இதன் பின்பு இதன் சுருக்க வடிவமான Blog எனும் பெயரை பீட்டர் மெர்ஹால்ஸ் (Peter Merholz) என்பவர் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது வலைப்பதிவின் பக்கப் பட்டையில் Webblog எனும் சொல் இரண்டாக உடைக்கப்பட்டு We blog என்று பிரித்துக் கையாளத் தொடங்கினார். இப்படியே வலைப்பூவிற்கு Blog எனும் பெயர் நிலைத்து விட்டது.

தமிழ் வலைப்பூ

இந்த blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் மற்றும் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினர். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வலைப்பூ சேவை

வலைப்பூ வசதிக்கான சேவையை முதன்முதலாக 1996 ஆம் ஆண்டில் எக்ஸான்யா (Xanya) எனும் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டில் சுமார் 100 நாட்குறிப்பேடுகள் இடம் பெற்றன. அதன் பிறகு சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியைச் செய்து கொடுத்தன. இந்நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.காம் எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்து அதிகமான வலைப்பூக்களை அமைக்க வாய்ப்பளித்தது. இதன் மூலம் ஆங்கிலத்தில் பலர் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சியைக் கண்ட கூக்ளி (Google) நிறுவனம் இந்நிறுவனத்தை விலைக்குப் பெற்றது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை அளிக்கப்பட்டது.

முதல் தமிழ் வலைப்பூ

தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும்,(www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.com/archive/21.html)

தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி

தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கியது. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் வரையே தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் க.துரையரசன் எழுதிய இணையமும் இனிய தமிழும்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்து தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 12000-ஐத் தாண்டிவிட்டது. இது இன்னும் பன்மடங்காக உயரக் கூடும்.

தமிழ் வலைப்பூக்களின் வகைப்பாடுகள் வளர்ச்சியும்

தமிழ் வலைப்பூக்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு முக்கியமான சில தலைப்புகளின் கீழ் அவற்றை வகைப்படுத்தலாம்.

1. தமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக்கள் இருக்கின்றன. வலைப்பூக்களை உருவாகியிருக்கும் பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் வலையேற்றம் செய்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக கவினுலகம் என்னும் வலைப்பூ முனைவர் நா. கண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த வலைப்பூவில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்துக்கள் கட்டுரை வடிவிலும், கருத்துரையின் மூலமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. (www.emadal.blogspot.com)

2. இந்தக் கவிதைகளுக்கான வலைப்பூக்களைத் தவிர தமிழாசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வரும் சிலர் தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர். மானிடன் என்ற பெயரில் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் மு. பழநியப்பன். அவர்களால் இவ்வலைப்பூ 25.04.06-ல் உருவாக்கப்பட்டது. இவ்வலைப்பூவில் அதிக அளவில் கவிதைகளும் கட்டுரைகளும் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களின் பரிமாணங்களைத் தனக்கே உரிய புதிய சிந்தனைகளுடன் இங்கு பதிவேற்றம் செய்துள்ளார். (www.manidar.blogspot.com) மு இளங்கோவன் என்ற பெயரில் ஒரு வலைப்பூ 1.5.2007 முதல் இயங்கி வருகிறது.பேராசிரியர் மு.இளங்கோவனால் வெளியிடப்படுகிறது. இதில் 300 இடுகைகள் வரை இடம் பெற்றுள்ளன. இவர் நாள்தோறும் புதிய புதிய இடுகைகளைப் பதிவேற்றம் செய்த வண்ணம் உள்ளார். இவரது கட்டுரைகள் இலக்கியத்தரம் வாய்ந்ததும் தெளிந்த நடையுடையதுமாக அமைந்துள்ளன. இவ்வலைப்பூவிலிருந்து பிற வலைதளங்களுக்குச் செல்லும் இணைப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு பழம்பெரும் இலக்கியவாதிகளின் தொகுப்புகள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. (mwww.mvelangovan.blogspot.com)

3. ஆன்மீக ஈடுபாடுடைய பலர் அவரவர்க்குப் பிடித்த ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக இந்து, இசுலாம், கிறித்தவம், பவுத்தம் மற்றும் பிற ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு தமிழில் வலைப்பதிவு செய்து வருகின்றனர். கந்தர் அலங்காரம் என்ற பெயரில் கண்ணதாசன் மற்றும் ரவிசங்கர் என்பவர்களால் 2005-ல் தொங்கப்பட்ட இவ்வலைப்பூ உலக்த தமிழர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டதாகும். இந்த வலைப்பூ தவிர இந்து மதத்தின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக திருப்பள்ளியெழுச்சி என்று மற்றொரு வலைப்பூவையும் இவர் உருவாக்கியுள்ளார். முருகப் பெருமானின் புகைப்படங்கள், பெருமைகள், விஷ்ணு பகவான் குறித்த பல செய்திகளும் சுப்ரபாதம், தோத்திரங்கள் என்று பக்தியின் உயர்வு நிலையைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. (www.murugaperuman.blogspot.com)

4. இணையப் பயன்பாட்டில் அதிகமாகப் பங்கு கொள்ளும் கணினிக்கான தொழில்நுட்பப் பணியிலிருக்கும் பலர் கணினி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருவாக்கிய பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவைகளில் சில மென்பொருட்கள் ஏப்ரல் 2005 முதல் தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் தமிழில் கணிப்பொறியை எவ்வாறு இயக்குவது, தமிழ் மென்பொருட்களின் பட்டியல்கள், என பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் உள்ளன. கணினி, இணையம் பற்றிய சில செய்திகளும் இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ளன. (www.tamiltools.blogspot.com)

5. விண்வெளி, அறிவியல், கணிதம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் சில வலைப்பூக்களையும் தமிழில் சிலர் உருவாக்கியுள்ளனர்.

குருவிகள் என்ற பெயரில் ஜுலை 2003லிருந்து தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் அறிவியல் செய்திகள் குறித்த கட்டுரைகளும், புகைப்படங்களும் அதிகமாக இடம் பெற்றுள்ளன. இந்த வலைப்பதிவர் குறித்த தகவல்களை அறிய முடியவில்லை. தமிழ் சினிமா செய்திகள் அவை குறித்த விமர்சனங்கள், நகைச்சுவை, அரிய புகைப்படங்கள் எனும் பார்வையிலான செய்திகளுடன் பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.

மருத்துவக் குறிப்புகள், மருந்துகள் அதைப் பயன்படுத்தும் முறைகள் என்று மருத்துவம் சார்ந்த சில வலைப்பூக்கள் தமிழில் உள்ளன. இந்த தமிழ் வலைப்பூக்களில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவங்களிலான வலைப்பூக்களே இருக்கின்றன. மூலிகை வளம் என்ற பெயரில் குப்புசாமி என்பவரால் 2007-ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைப்பூவில் பல மூலிகைச் செடிகள் குறித்தும் அவற்றின் தாவரப் பெயர், தாவரக் குடும்பம், வழக்கத்திலிருக்கும் அதற்கான வேறு பெயர்கள், பயன் தரும் பாகங்கள் போன்றவைகளைப் புகைப்படத்துடன் தந்துள்ளார். இவை தவிர பல நோய்களுக்கு மூலிகை மருந்துகள் குறித்த தகவல்களும் கொடுத்திருப்பது நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. (wwwww.mooligaivazam-kuppusamy.blogspot.com)

6. பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்ற ஒரு சில பெண்களுக்கான சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன.

சாதனைப் பெண்கள் என்ற பெயரில் ஜெர்மனியிலிருக்கும் திருமதி. சந்திரவதனா செல்வகுமாரால் உருவாக்கப்பட்ட சில வலைப்பூக்களில் இதுவும் ஒன்று. இந்த வலைப்பூவில் பல அச்சிததழ்களில் வெளியான சில முக்கியப் பெண்மணிகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார்.. (www.vippenn.blogspot.com)

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்

I. வலைப்பூக்களின் வருகையால் தமிழ் மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன.

II. தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் பெறுகியுள்ளனர். இதனால் தமிழின் வளர்ச்சி உயர்ந்துள்ளது.

III. வலைப்பூக்களால் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்கள் மிக விரைவாக கிடக்கின்றன.

IV. இலங்கை,மலேசியா, கனடா,தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்த்துகொள்ள முடிகிறது.

V. தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களானா சங்க இலக்கியம் முதல்கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவினால் உலகத் தமிழ்ர்களுக்குக் கிடக்கிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிப் பெற்றுவருகிறது.

VI. இவைகள் அன்றி கணிப்பொறிச் சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன.

அறிவியல், விஞ்ஞாணக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றது.

VII. உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள் இடம்பெற்றுள்ளன்.

VIII. தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளிவருகின்றன. இதனால் தமிழ் ஆய்விற்குப் பல வழிகளில் பயன்படுகின்றன.

IX. வலைப்பூவினால் தொழில் நுட்ப வளர்ச்சிச் பெற்றுத் தமிழ்மொழி வளர்ந்து வருகின்றது.

X. வலைப்பூகளில் வெளிவரும் படைப்புகளும், கட்டுரைகளும், கவிதைகளும், பிற கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து எழுதுகின்றனர். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம். மேலும் பல துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழிக்குத் தன்னால் இயன்ற பனிகளையும் செய்து வருகின்றனர்.

முடிவுரை

எப்படி இலக்கிய வரலாற்றில் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம் என்கின்றோமோ அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுக காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம்.புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. iஇதனால் பலவகைப்ப்ட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு அளப்பரியாத் தொண்டினைச் செய்து வருகிறது எனலாம்.





ஐயா,
 உங்களது படைப்பினைப் பகிர்வதில் பெருமைகொள்கிறேன்.
 
சமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.
வளர்ந்துவரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றது. கணினிப் பயன்பாடுகள் இல்லாத துறைகளே இல்லை எனலாம். இன்று கிராமங்களில் கூட இணையப்பயன்பாடு என்பது மிக சாதாரணமாக உள்ளது. எனவே இணையக் கலாச்சாரம் அதீத வளர்ச்சியடைந்து வருகிறது. இன்று இணையம் ஒரு ரூபாய் நாணயத்தைப்போல நன்மை, தீமைகள் என இரண்டு பக்கங்களைக் கொண்டுள்ளது.
 வலைதளங்கள்
உலகளாவிய அளவில் பல்வேறு வலைதளங்கள்  உலகத்தகவல் அனைத்தையும் நம் கண்முன்னே நம் இல்லத்திலேயே அள்ளித்தருகிறது. இதில் பொழுதுபோக்கிறகாக அமைக்கப்பட்ட பல சமூக வலைதளங்களும் அடங்கும்.
சமூக வலைதளங்கள்
இணையம் வழியாக சமூக வலைதளங்கள் அனைத்து வகை மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களின் பங்கு அமைகிறது. இத்தகைய சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும் தற்சமயம் பல குற்றங்களும் பெருகி வருகின்றன என்பதை மறுக்க இயலாது. பல்வேறு இணையங்களும், சமூக வலைதளங்களும் மக்களின் முன்னேற்றத்திற்காக வடிவமைப்பட்டவையாக அமைந்துள்ளன.
சில சமூக வலைதளங்கள்
பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலைதளங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும், ஆர்வமும்  அதிகமாக உள்ளன. Facebook, Twitter, Linked in, My space, Ning, Google+, Tagged, Orkut, Hi5, My year book, Youtube, Flicker, Digg போன்ற சமூக வலைதளங்கள் இன்று பெருமளவில் அனைவராலும் அறியப்படுகின்றனவையாக உள்ளன. இவற்றில் முகநூல் எனப்படுகின்ற Facebook மற்றும் Twitter ஆகியவை மிகவும் பிரபலமான வலைதளங்களாகும்.
கணினிகளில் மட்டுமன்றி இப்போதுஸ்மாட் போன்’ ?(Smart Phone) என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. கல்லூரி மாணவர்களிடம் இந்த ஸ்மாட் போன்கள் பெருமளவில் புழக்கத்தில் உள்ளன. இதற்குக் காரணம் அவற்றில் 24 மணி நேரமும் இருந்த இடத்திலிருந்தே சமூக வலைதளங்கலில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துகொண்டு பார்வியிடலாம் என்பதுதான்.
தற்சமயம் ‘வாட்ஸ் அப்’  (Whats App) என்ற வலைதளம ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளது. இதன் வாயிலாக புளுடூத் வசதி இல்லாமலேயே இனையத்தின் வழியாக செய்திகள், புகைப்படங்கள், வீடியோப் பதிவுகள், வாழ்த்துக்கள் என அனைத்தையும் பிறரின் அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம். நவீனத் தொழுல்நுட்பங்கள் கையடக்கத்தில் இருப்பதால் அனைவரின் பார்வையும் ஸ்மாட் போன்கள் மேல் திரும்பியுள்ளன.
 இந்த வாட்ஸஅப்பை ரூ.ஒரு லட்சம் கோடிக்கு முகநூல் வாங்கியுள்ளது. ஏதேனும் ஒரு வைகயில் மக்களைக் கவர்வதற்காகவே சமூக வலைதளங்கள் முயல்கின்றன. புதிய புதிய சேவைகளை அறிமுகப்படுத்திப் பயனாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதே சமூக வலைதளங்களின் நோக்கமாகின்றன.
வலைதளங்களில் உறுப்பினாராக உள்ளவர்களின் எண்ணிக்கை முகநூலில் 80 கோடியும் டிவிட்டரில் 20 கோடி, லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடியும், குருப் ஆன் தளத்தில் 11.5 கோடியும், கூகுள் பிளஸில் 9 கோடிபேரும் சீனைவைச் சார்ந்த சமூக வலைதளங்களான ரென்ரென் 17 கோடிபேரும், கியூஜோன் 50 கோடிபேரும், சீனா வைபோ 25 கோடிபேரையும் மற்றுமுள்ள பிற சமூக வலைதளங்களில் சுமார் 50 கோடிகும் அதிமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.” (www.nathikaral.in) என்ற இணையதளம் சமூக வலைதளங்களின் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுள்ளது.
சமூக மாற்றம்
மின்னஞ்சல் முகவரி வைத்திருப்பதேயே பெரிதாக கருதும் இன்றையச் சூழலில் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் அற்ப்பமாக பார்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், டிவிட்டர், ஆர்குட், டிவிட்டர், ஆர்குட், யூடியூப் ஆகியவற்றில் கணக்கு இல்லாதவர்களை எள்ளி நகையாடுகின்றனர். இத்தகைய சமூக மாற்றங்கள சமூக வலைதளங்கள் ஏற்படுத்தியுள்ளன.
பிரபலமான வலைதளங்களில் பெயர்களே கல்லூரி மாணவர்களின் பேச்சினால் இடம் பெறுவதை காணமுடிகின்றது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தைப் பயன்படுத்தும் நிலைமாறி இணையத்திலேயே நேரத்தைக் கழிக்கின்ற நிலை உருவெடுத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நன்மைகள்.
சமூக வலைதளங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமின்றி பல நன்மைகளையும் நல்கிக் கொண்டிருக்கிறது. கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களை ஒன்றிணைக்கவும், தகவல் பரிமாற்றத்திற்கும் சமூக வலைதளங்கள் உதவுகின்றன.
உறவுகளுக்குப் பாலம்
தன் குடும்பத்தைப் பிரிந்து சென்ற அயல்நாடுகளில் வாழும் பலரும் சமூக வலைதளங்களின் உதவியுடன் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். அதுமட்டுமின்றி நட்பு வட்டாரத்தையும் பெருக்கிக் கொள்கின்றனர்.
வணிக வளர்ச்சி.
வணிக நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பொருட்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ள முயல்கிறது. இதனால் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்குச் சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாகிறது.
கருத்துப் பரிமாற்றம்
பலர் வலைதளங்களில் இடும் புதிய பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வலைதளங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடுவதால் அப்பதிவுகள் பலரால் பார்வையிடப்படும். மேலும் அவர்கள் அப்பதிவுகளை அவர்களின் நண்பர்களிடம் பகிர்வார்கள்.
தீமைகள்
சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலளிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட  வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
 ஏமாற்று வேலைகள்
அது மட்டுமின்றி இணையத்தொடர்பில் ஈடுபட்டு சிலர் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்கின்றனர். ஒருவரே பல பெண்களை மணந்து கொள்ளும் ஏமாற்று வேலைகளும் நடக்கின்றன. சில பெண்கள் சமூக வலைதளங்களால் மன உளைச்சலுக்கு  ஆளாகி வெளியில் சொல்ல முடியாமல் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.
குற்றங்கள்
சமூக வலைதளங்களின் உலகலாவிய தொடர்புகளால் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சைபர் கிரைம் போலிசாருக்கு இடையூறை ஏற்படுத்துகிறது.
அதிகப்பயன்பாட்டின் விளைவு.
அலைபேசியில் 24 மணி நேரமும் சமுக வலைதளங்களையே  பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.
பெருமளவில் மக்கள் சமுக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர்.”உலக அளவில் 150 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகிறார்கள். முகநூல், டிவிட்டர், மை ஸ்பேஸ் உள்ளிட்ட பத்து சமூக வலைதளங்கள் உலகில் அதிகம் பயன்படுத்தப்படுபவை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் முகநூல்(Facebook) மட்டும் 50 கோடிக்கும் மேலான பயணர்கள் உறுப்பினர்களாக இருந்து பயன்படுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர்கள் சிறுவர்கள், இளைஞர்களும்தாம். சமுக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் இந்தியா ஏழாவது இடத்திலிருக்கிறது” (tamil. Thehindu.com) என 27-10-2014 அன்று தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடைமகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமுக வலைதளங்களில் மூழ்கி இருப்பது துன்பத்தையே ஏற்படுத்தும்.”பொய்யான முகவரி கொடுத்து நமது சொந்த இரகசியங்களைக் களவாடிக்கொண்டு நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடுவதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது” (http/ponseinilam.blogspot.in) என வலைப்பதிவு செய்தி குறிப்பிடுகின்றது. இதுபோல பலவைகயான குற்றங்கள் சமுக வலைதளங்கள் வாயிலாக நடைபெறுகின்றன.
அண்மையில் சமூக வலைதளஙகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தினமலரில் நவம்பர் 21, 2013 அன்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே “பல முன்னேற்றங்கள் கண்டுவரும் இந்நாளில் சமூக வலைதளங்கள் மூலமாக தவறான செயல்கள், நாட்டிற்கு எதிரான குற்றங்கள் பரப்பி விடப்படுகிறது. இதற்கான சுதந்திரம் தவறான வழியில் செல்கிறது. இது கவலை தரும் விஷயம் ஆகும். இவைகளைத் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.
சமுக வலைதளங்களில் பரவும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தடுக்க “லைடிடெக்டர்” என்னும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. இது தகவல் தொடர்பு அமைப்புகளின் உதவியுடன் ஆராய்ந்து நாம் தேடும் தகவலுக்கு அருகிலேயே அதன் உண்மைத் தன்மைகளை வெளியிடும். சமீபத்தில் இது சமுக வலைதளங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டது. இது பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.
சமுக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்கள் அதில் உள்ள நன்மை தீமைகளை அறிந்து அளவோடும், பாதுகாப்போடும் பயன்படுத்தினால் இதுபோன்ற குற்றங்களைக் குறைக்க இயலும். ஆஹ்டிலும் குறிப்பாகப் பெண்கள் புத்திசாலித்தனமாகவும், சற்று விழிப்போடும் பயன்படுத்துவது நன்மை பயக்கும்.
Image result for பாரதி கவிதைகள்தமிழன் வீழ்வதில்லை.